ETV Bharat / entertainment

பொங்கல் வசூலில் கேப்டன் மில்லரை மிஞ்சிய அயலான்.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? - சினிமா அப்டேட்

Pongal Release Movie : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன.12ம் தேதி திரையரங்குகளில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் வேட்டையை குவித்து வருகிறது.

Pongal Release Movie
பொங்கலுக்கு வெளியாகி மாஸ் காட்டும் திரைப்படங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 1:17 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜன.12ஆம் தேதி தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடித்த மிஷன் போன்ற படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது. தற்போது இப்படங்கள் இந்த ஆண்டின் முதல் வசூல் வேட்டையைத் தொடங்கி வைக்கும் படங்களாக இருக்கும் என்றும், கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்: ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை‌ இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் கேப்டன் மில்லர். ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனாலும், வசூலில் குறையில்லாமல் உள்ளது. தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் இணைந்து இப்படத்தை காப்பாற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் ரூ.8.60 கோடியும், இரண்டாவது நாளில் சற்று குறைந்து ரூ.6.75 கோடி என இரண்டு நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.15.45 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் பற்றிய அறிவியல் புனைகதையாக (Science fiction) உருவாகிய அயலான் திரைப்படம், பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு, இந்த பொங்கலுக்கு வெளியானது. குழந்தைகளைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், முதல் நாளில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது நாளில் ரூ.8 கோடி எனவும் உலகளவில் ரூ.18 கோடி வரை 2 நாட்களில் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மிஷன்: விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் திரையரங்குகளில் வெளியான மிஷன் (Mission : Chapter 1) திரைப்படம், 2 நாட்களில் ரூ.1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பொங்கல் விடுமுறை துவங்கிய நிலையில், இனி வரும் நாட்களில் கேப்டன் மில்லர் மற்றும் அயலானுக்கு இடையே வசூலில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்.. கேப்டன் மில்லர் படத்தைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.