ETV Bharat / entertainment

நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.. எதற்கு தெரியுமா?

Police letter to actress Trisha: மன்சூர் அலிகான் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து தனது விளக்கங்களை எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளனர்.

நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 3:01 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மன்சூர் அலிகான் பேச்சிற்கு நடிகை த்ரிஷா தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்தார். இதை அடுத்து மற்ற நடிகைகளும், தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் மனுசூர் அலிகான் தரப்பிலிருந்து தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவும், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையம், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, டிஜிபிக்கு புகார் கடிதம் ஒன்றும் அனுப்பிருந்தது.

அதன் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண்களை பாலியல் ரீதியாக பேசுதல் மற்றும் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி தற்கொலைக்கு தூண்டுதல் என இரண்டு பிரிவின் கீழ், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரடியாக ஆஜரான, மன்சூர் அலிகான் தனது தரப்பு விளக்கங்களை அளித்தார். இந்த நிலையில், த்ரிஷா குறித்து தவறுதலாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதற்கு நடிகை த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக சமூக வலைதளத்தில் சுசகமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த விவகாரம் குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட த்ரிஷா தரப்பிலிருந்து அவரது விளக்கங்களை கேட்க பலமுறை போலீசார் அவரை தொடர்பு கொண்டும் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலீசார் நடிகை த்ரிஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில் இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து, தனது விளக்கங்களை எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தெரிவித்து உள்ளனர். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை த்ரிஷா கொடுக்கும் விளக்கங்களை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிருத்விராஜின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.