ETV Bharat / entertainment

ஜீ5 ஓடிடி தளத்தின் புதிய தொடர் 'அயலி'

2022-ம் ஆண்டு இணையத் தொடர்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளம் "அயலி" என்ற புதிய இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதியினை அறிவித்துள்ளது. புதுமையான கதைக் களத்தில் உருவாகியிருக்கும் இந்த இணையத்தொடரின் முன்னோட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜீ5 ஓடிடி தளத்தின் புதிய தொடர் ”அயலி”
ஜீ5 ஓடிடி தளத்தின் புதிய தொடர் ”அயலி”
author img

By

Published : Jan 19, 2023, 4:28 PM IST

விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5, தற்போது இந்த 2023ஆம் ஆண்டில் மீண்டும் "அயலி" என்ற தொடரை அறிவித்துள்ளது.

இதனை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S.குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இது எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா, அனுமோள், அருவி மாதவன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ZEE 5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் 8ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான், அயலி. அதோடு, வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகளைப் பற்றி இந்த வெப் சீரிஸ் பேசுகிறது. இந்தப் பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.

பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா? என்பதைக் கதை விவரிக்கிறது.

இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதுமையான கதை தான், அயலி. பேப்பர் ராக்கெட்டின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, இந்த தொடரை பார்வையாளர்களுக்கு பெருமையுடன் அறிவித்தார். மேலும் இதில் லட்சுமி பிரியா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹன்சிகாவின் "லவ் ஷாதி டிராமா" பர்ஸ்ட் லுக் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.