சென்னை: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படம் 'புராஜெக்ட் கே'. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்l நிலையில், நேற்று அமிதாப்பச்சனின் 80ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'புராஜெக்ட் கே' படக் குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகையில், அவருடைய முஷ்டி மடக்கிய கையை மட்டும் தனித்துவத்துடன் வடிவமைத்து போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடன் 'அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ’பேட்டைக்காளி’ படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது - நடிகை ஷீலா