ETV Bharat / entertainment

ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள பஞ்சாயத்தா..! காப்பி சர்ச்சையில் கமலின் ‘தக் லைஃப்’ - thug life copy controversy

Thug Life Movie Copy Controversy: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ 2019-இல் வெளியான ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் (Rise of Skywalker) என்ற படத்தின் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது.

netizens criticize kamal haasan thug life movie is copy of rise of skywalker controversy
கமலில் தக் லைஃப் திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:38 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்தியன்2, KH 234 ஆகிய படங்களின் அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (நவ.06) கமல்ஹாசனின் 234-வது படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டு படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தனது 233-வது படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

அதில், “என் பேரு ரங்கராயர் சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய ஸ்டைலில் கமல் வசனம் பேசியுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவில் கமலின் தோற்றமும் அவரை எதிர்த்து சண்டை செய்பவர்களின் தோற்றமும் 2019-ஆம் ஆண்டு வெளியான ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் (Rise of Skywalker) என்ற படத்தின் காட்சி போல உள்ளன என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் திரைப்படத்தின் வெவ்வேறு காட்சிகளை ஒன்றாக இணைத்து வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என்பது கமல் ரசிகர்களின் பதிலாக உள்ளது. படத்தின் அறிமுக டீசர் வெளியான நாளிலே சர்ச்சையில் சிக்கி தக் லைஃப் பேசு பொருளாக மாறியுள்ளது.

நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. மேலும், இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ், மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்ட நிலையில் படத்தைச் சுற்றும் சர்ச்சைகளால், இந்த படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிங்க: கமல்ஹாசன் என்னும் திரைக்கலைஞன் தமிழ் சினிமாவுக்கு தந்த அழியா சுவடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.