நயன்தாரா-விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி 6 ஆண்டுகள் காதலுக்குப் பின்னர், திருமண வாழ்க்கையில் இன்று அடியெடுத்து வைத்துள்ளனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் விருந்தினர்களுக்காக தடல்புடலான அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மெனுவில் இடம் பெற்றிருந்த பலாப்பழ பிரியாணி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஆங்கிலத்தில் Kathal Briyani என மெனுவில் குறிப்பிட்டிருந்ததால், அனைவரும் காதல் பிரியாணி என நினைத்து ரொமான்டிசைஸ் செய்யத் தொடங்கி விட்டனர். காதல் பிரியாணியை இணையத்தில் தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காதல் பிரியாணி குறித்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
இந்தியில் கட்ஹல் அதாவது "Kat" "hal" என்றால் பலாப்பழம் என்று பொருள் தரும். பலாப்பழத்தால் செய்யப்பட்ட பிரியாணியை காதல் பிரியாணி என நினைத்து பலரும் தேடி வந்தனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் என இருவருமே அசைவப் பிரியர்கள் என்றாலும், இந்து முறைப்படி நடைபெறும் திருமணம் என்பதால் சைவ உணவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அசைவ உணவுகளுக்கு போட்டி போடும் விதமாக அதே மாதிரியான சுவையில் பல்வேறு சைவ உணவு வகைகளைப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முதல் புகைப்படம்