ETV Bharat / entertainment

'வடக்கன்' படத்துக்காக தேவா பாடிய பாடல்.. படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்..! - Vadakkan movie tamil

Vadakkan tamil movie: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜனனியின் இசையில் உருவாகி வரும் 'வடக்கன்' படத்துக்காக, இசையமைப்பாளர் தேவா ஒரு பாடல் பாடியுள்ளார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் வடக்கன் படத்துக்காக தேவா பாடிய பாடல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 10:41 PM IST

சென்னை: எம் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனம், திரைக்கதை அமைப்பு போன்றவற்றில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக இயக்கும் திரைப்படம் 'வடக்கன்'.

தமிழ்நாடு முழுவதும் பெருநகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை, பல்வேறு துறைகளில் வட இந்திய மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த பொழுது போக்கு திரைப்படமாக 'வடக்கன்' திரைப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஹரிஷ் கல்யாணின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

புத்தகப் பதிப்புத்துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் 'டிஸ்கவரி புக் பேலஸ்' வேடியப்பன் முதல் முறையாக 'வடக்கன்' திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறார். கூத்துப் பட்டறை மாணவரான குங்குமராஜ் கதாநாயகனாகவும், நடிகை வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.

கர்நாடக இசைத்துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், பல்வேறு இசைப்பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J.ஜனனி என்பவர் 'வடக்கன்' திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தில் பிரதானமாக இடம்பெறும் ஒரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா எழுத, இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

பாடலைப் பாடி முடித்ததும், காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஏற்றவாரு உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் இசையமைப்பாளர் தேவா பாராட்டினார். மேலும், 'வடக்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும், இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: “இவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லை” - மிஷ்கினை புகழ்ந்த பாலா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.