சென்னை: பரத் நடித்துள்ள மிரள் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (நவ.05) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், பரத், வாணி போஜன், இயக்குநர் சக்திவேல், தயாரிப்பாளர் சக்தி வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தயாரிப்பாளர் சக்திவேலன் கூறுகையில், “20 நாள்களில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனால், குவாலிட்டி குறைவில்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்திற்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து தயாரிப்பாளர் டில்லி பாபு கூறுகையில், “தயாரிப்பாளராக இருக்கும் எங்களது உழைப்பு பெரியது. கதையை கேட்டு இது நன்றாக இருக்குமா என்று தேர்வு செய்ய வேண்டும். நடிகர்கள் தேர்வும் முக்கியம். பரத் மற்றும் வாணி போஜனின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.
பின்னர் பரத் கூறுகையில், “இப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இயக்குநர் புதுமுகமாக இருந்தாலும் அனைத்தும் தெரிந்தவர். ரவிக்குமார் உடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது நாயகனுக்கான படம் கிடையாது. வாணி போஜனின் நடிப்பும் முக்கியமானது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளின் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்!