ETV Bharat / entertainment

இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு "மருதநாயகம்" - மருதநாயகம் படப்பிடிப்பு

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

Marudhanayagam probably only film shoot attended by Queen Elizabeth II says Kamal Haasan Headline *

author img

By

Published : Sep 9, 2022, 1:38 PM IST

சென்னை: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று (செப் 8) காலமானார். அவரது மறைவிற்கு உலக அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் ட்விட்டர் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இரண்டாம் எலிசபெத்துடன் கமல் ஹாசன்
இரண்டாம் எலிசபெத்துடன் கமல் ஹாசன்

அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரண்டாம் எலிசபெத்தின் இந்தியப் பயணங்கள்... நினைவுத்தொகுப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.