ETV Bharat / entertainment

'மாமனிதன்'படத்தில் விஜய் சேதுபதியின் அழுத்தமான நடிப்பைப்பார்க்கிறோம் - நடிகர் சிவகுமார் வாழ்த்து - விஜய் சேதுபதியின் மாமனிதன் சிறப்பு வாய்ந்தது

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான மாமனிதன் திரைப்படம் விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு வாய்ந்த படம் என்று நடிகர் சிவக்குமார் வாழ்த்து கூறியுள்ளார்.

'மாமனிதன்'படத்தில் விஜய் சேதுபதியின் அழுத்தமான நடிப்பைப்பார்க்கிறோம் - நடிகர் சிவகுமார் வாழ்த்து

author img

By

Published : Sep 22, 2022, 7:16 PM IST

Updated : Sep 22, 2022, 7:50 PM IST

சென்னை: 'மாமனிதன்' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர்‌ தனது குறிப்பில், 'துப்பாக்கி சத்தம், பன்ச் டயலாக், காதை பிளக்கும் பின்னணி இசை, அடிதடி ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சிற்றூர்களில் சராசரி மனிதர்களுக்கு இடையில் உலா வந்த ஒரு அறியப்படாத மனிதனின் கதையை யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு திரைப்படமாக வடித்துள்ளார், இயக்குநர் சீனு ராமசாமி.

ஒரு ஏமாற்றுபவன்; அவனிடம் ஏமாந்த ஒருவன்; இவர்களுக்கு இடையிலான போராட்டத்தில் உண்மையில் அவதிக்குள்ளாவது அவர்களின் குடும்பங்கள்தான் என்பதைக் காட்டியுள்ளார். தன் மகனிடம் ஏமாந்தவனிடம் தனது தங்க நகைகளை ஈடாக அளிக்கும் நியாய உணர்வு கொண்ட தாய், ஊரைவிட்டு ஓடிவிட்டவனின் குடும்பத்தைத் தனதாக ஏற்றுக் காப்பாற்றும் கருணை உள்ளம் கொண்ட நண்பன், இதுபோல மனதை நெருடும் கதாபாத்திரங்கள் உண்டு.

அதனையடுத்து பண்ணைபுரம் கிராமத்து அழகு, அங்கிருந்து கேரளத்து புழை கரையோர அழகு, மேலும் அங்கிருந்து காசி நகரம் காவி உடைகளின் ஓங்காரம் என்று மூன்று பகுதிகளாக கதை நகர்ந்து செல்கிறது. இசைஞானியைக் கொண்டு கங்கா ஆர்த்தி பாடல் ஒன்றை கொடுத்திருக்கலாம்.

காசியை அதன் தெய்வீகத்தோடு அணுகிய விதம் அங்கு நல்லிணக்க உணர்வை வளர்க்கும் விதத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் அற்புதம்.

ஆட்டோவில் ஒரு மனிதர் தவறவிட்ட தங்க நகைகளை அந்த மனிதரை தேடிக்கண்டு பிடித்து ஒப்படைக்கும்போதே, விஜய் சேதுபதி மாமனிதராகத்தான் அறிமுகம் ஆகிறார். சராசரி மனிதர்களை உற்று நோக்கினால் அவர்களுக்குள்ளும் ஒரு மாமனிதன் இருப்பான் என்பதே இந்தப் படத்தின் கருத்து ஆக நான் பார்க்கிறேன்.

விஜய் சேதுபதியின் தனிச்சிறப்பு ஏற்றுக்கொண்ட பாத்திரம் எதுவாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அதன் போக்கில் நடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பது சிறப்பு என்றாலும், இந்தப்படத்தில் ரொம்ப கவனமாக அழுத்தமான நடிப்பை அவரிடம் பார்க்கிறோம்.

இந்தப் படம் மொத்தத்தில் மாமனிதனுக்கு பாஸ் மார்க் மகிழ்ச்சியோடு கொடுக்கலாம்' என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வெளியானது அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Last Updated : Sep 22, 2022, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.