ETV Bharat / entertainment

Maamannan Box Office: வெளியான முதல் நாளே வசூலை வாரிக் குவித்த மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வெளியான முதல் நாளன்று ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 1, 2023, 11:02 AM IST

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமூக நீதி சார்ந்த படம் எடுப்பதில் கைதேர்ந்த மாரி செல்வராஜ் இந்த படத்திலும் பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்குமுறை பற்றி பேசியுள்ளார்.

இத்திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான மாரி செல்வராஜ் படமாக இருந்தாலும், இந்த முறை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஆதிக்க சாதியினரால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை பேசியுள்ளார். இப்படம் முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.

தனபால் இரண்டு முறை சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர். இவரது கதையில்தான் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். ஒரே கட்சியில் இருக்கும் பட்டியல் இன எம்எல்ஏவை எப்படி ஆதிக்க சாதியினர் நடத்துகின்றனர், அவருக்கான மரியாதை என்ன என்பதை காட்டியுள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு தனது திரை வாழ்வில் ஆகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் என்றும் பாராட்டுகள் குவிகின்றன. அது மட்டுமின்றி உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், மாமன்னன் திரைப்படம் வெளியாகி முதல் நாள் அன்றே ரூ.8 கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இதுவரை உதயநிதி நடித்துள்ள படங்களிலேயே அதிகம் என்கிறார்கள்.

மேலும், இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் மாமன்னன் 4வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் அஜித்தின் துணிவு படம் உள்ளது. விஜய்யின் வாரிசு இரண்டாவது இடத்திலும், பொன்னியின் செல்வன் 2 மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பெரிய நடிகரின் படமாக இல்லாதபோதும், சில காரணங்களால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக இந்த படத்திற்கு அதிக வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மாமன்னன் படம் வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவையற்ற கேள்வி கேட்க வேண்டாம்.. கடுப்பான சரத்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.