ETV Bharat / entertainment

சினிமா ரசிகர்களே இந்த வாரம் ரிலீஸான படங்கள் என்னென்ன தெரியுமா? - alagai pookuthe tamil movie

Tamil Movies releasing today: தமிழ் சினிமாவில் இன்று (நவ.24) வெளியாகி உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்த இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த வாரம் ரிலீஸான படங்களின் பட்டியல்
இந்த வாரம் ரிலீஸான படங்களின் பட்டியல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 12:26 PM IST

சென்னை: உலகமெங்கும் பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படுவது நீண்ட நாட்களாகப் பின்பற்றி வரக்கூடியவை. அந்த வகையில், இந்த ஆண்டு நிறைவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், வெளியாகாமல் இருக்கும் படங்கள் அனைத்தும், அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று (நவ.24) மொத்தம் ஐந்து படங்கள் வெளியாகி உள்ளன.

80ஸ் பில்டப்: குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண், தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் '80ஸ் பில்டப்'. இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-ஸ் காலகட்டத்து காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம், சந்தானத்தின் வழக்கமான காமெடி கலாட்டாவாக இருக்கும் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

குய்கோ: செய்தித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர், அருள்செழியன். இவர் தற்போது முதல் முறையாக இயக்கியுள்ள படம் 'குய்கோ'. குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே குய்கோ. இப்படத்தில் விதார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இறந்தவர்களை வைக்கும் குளிர்சாதனப் பெட்டி பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது. இப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

ஜோ: ரியோ ராஜ், மாளவிகா, பாவ்யா உள்ளிட்டோரின் நடிப்பில் காதல் படமாக உருவாகியுள்ளது. ஹரிஹரன் இயக்கத்தில் இளமை துள்ளும் காதலுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்து குமாரின் இசையும், குறிப்பாக படத்தில் ஒரு பாடல் பிரபல பாடகர் வைசாக் எழுத, யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சில நொடிகளில்: ரிச்சர்ட், யாஷிகா ஆனந்த், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் லாக்கர், அழகாய் பூக்குதே ஆகிய படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம், பல்வேறு பிரச்னைகள் காரணமாக இன்று வெளியாகவில்லை. படம் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் எனப் படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "துருவ நட்சத்திரம் இன்று ரிலீஸ் ஆகவில்லை".. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதம் வாசுதேவ் மேனன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.