ETV Bharat / entertainment

”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கண்கலங்கிய லிங்குசாமி - கீர்த்தி ஷெட்டி

சென்னையில் நடைபெற்ற ”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் ”என் அம்மா இருந்திருந்தால் நல்ல மகனை பெற்றிருக்கிறோம் என சந்தோசப்பட்டிருப்பார்” என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.

”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கண்கலங்கிய லிங்குசாமி

author img

By

Published : Jul 6, 2022, 11:01 PM IST

சென்னையில் நடைபெற்ற இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி, நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர், பாலாஜி சக்திவேல், சிறுத்தை சிவா, வசந்தபாலன், பார்த்திபன், போன்ற பல முன்னனி இயக்குநர்கள் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் இறுதியாக பேச வந்த இயக்குநர் லிங்குசாமி மேடையில் கண்கலங்கினார், தொடர்ந்து பேசிய அவர், என் உடம்பு முழுக்க கண் இருந்தால் தண்ணீர் அப்படி வரும். என் வாழ்க்கையில் என்ன இழந்தாலும் இவர்களை இழக்கக்கூடாது. நான் வாய்ப்பு கேட்டு சென்ற அனைவரும் இப்பொழுது எனக்காக மேடையில் அமர்ந்துள்ளனர். என் அம்மாவை அழைத்து வரவேண்டும் என நினைத்தேன் ஆனால் முடியவில்லை, இங்கே இருந்திருந்தால் எப்படிப்பட்ட நல்ல மகனைப் பெற்றிருக்கிறோம் என சந்தோஷப்பட்டிருப்பார்.

என்னிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம், ஆபிஸ் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் இப்படிப்பட்ட நண்பர்கள் உள்ளனர். உலகில் கோடிஸ்வரர்கள் பலர் உள்ளனர். ஆனால் என்னுடைய சொத்து இவர்கள் தான் என மேடையிலேயே கண்கலங்கினார்.

இதையும் படிங்க: Love is Political: வெளியானது ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.