தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக 'தி லெஜண்ட்' என்ற படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் மற்றும் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா நடித்துள்ளனர். ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ’மொசலே’ மற்றும் ’வாடிவாசல்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இப்படத்தில் இருந்து ’போ போ’ என்ற மூன்றாவது பாடல் நாளை வெளியாக உள்ளது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த இந்தப் படம், 5 மொழிகளில் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ’தவறான சில விமர்சனங்கள் மனதிற்கு கஷ்டமாக உள்ளது..!’ - பார்த்திபன்