ETV Bharat / entertainment

பல குரல் மன்னன் கோவை குணா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு - kovai guna age

தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த கோவை குணா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பல குரல் மன்னன் கோவை குணா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

author img

By

Published : Mar 21, 2023, 9:26 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவை குணா. இவர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி கோவை மாவட்ட மக்களிடையே பிரபலமனவர். குறிப்பாக, நடிகர்கள் ரஜினி, சிவாஜி குரலில் மேடைகளில் பேசி தனி கவனம் பெற்று வந்தார். இவரது திறமையால் அவருக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி ஷோக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.

இதையும் படிங்க: 'ஓய்... நானா இறந்துட்டேன்' - வீடியோ வெளியிட்டு வதந்தி குறித்து கர்ஜித்த பிரபல நடிகர்!

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பல குரல்களில் பேசியும், நகைச்சுவையை ஊட்டிம் லட்சக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கோவை குணா. அதன் பின் காதல் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக்கும் மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே டாயாலிஸ் செய்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (மார்ச் 21) உடல் நிலை மேலும் மோசமானது. அதைத் தொடர்ந்து மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பில் களேபரம்.. திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

அதன் பின் அவரது உடல் கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருடன் சமகாலத்தில் பயணத்தை தொடங்கிய பல குரல் கலைஞர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.

நாளை (மார்ச் 22) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், நகைச்சுவை நடிகர்களும், பல குரல் கலைஞர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கோவை குணா 80 மற்றும் 90 கிட்ஸ்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமானவர். குறிப்பாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இதையும் படிங்க: தசரா படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தங்க நாணயங்களை பரிசளித்த கீர்த்தி சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.