ETV Bharat / entertainment

பெண்ணை பற்றிய ஆணின் பார்வை..! கயல் ஆனந்தியின் மங்கை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..! - Kayal Anandhi

Mangai Movie First Look Poster: ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிப்பில், குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் திரைப்படமான 'மங்கை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Kayal Anandhis mangai movie first look poster has been released
மங்கை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 11:21 AM IST

சென்னை: ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிப்பில், குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக 'கயல்' ஆனந்தி நடிப்பில் 'மங்கை' திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் மையக்கருவைப் பிரதிபலித்து ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என ரசிகர்களால் கூறப்படுகிறது.

'மங்கை' படம் குறித்துப் பேசிய இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, "ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'மங்கை' திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராதப் பாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆனந்தி நடிக்கிறார். துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சசிகுமார் இயக்கத்தில் உருவான 'ஈசன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடந்துள்ள துஷி, தயாரிப்பாளரும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, முத்திரைப் பதித்து வருபவருமான ஜெயப்பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

'மங்கை' திரைப்படம் பெண்ணைப் பற்றிய ஆணின் பார்வையைப் பேசும் விதமாகவும், ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மூணாறு, பூம்பாறை, தமிழ்நாட்டின் தேனி, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

மங்கை திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் என நம்புகிறேன். பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இயக்குநர்களோடு இணை இயக்குநராகவும் வசனகர்த்தாகவும் குபேந்திரன் காமாட்சி பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் மங்கை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தின் இசையைப் பிப்ரவரியிலும், திரைப்படத்தை மார்ச் மாதத்திலும் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கத்தில் அசார் மற்றும் மைதீன் ஆகியோர் நடிக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்,' மற்றும் வசந்த் ரவி நடிக்கும் 'இந்திரா' ஆகிய திரைப்படங்களையும் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் பேனரில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் முதல் பார்வை ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிர வைக்கும் புகைப்படத்துடன் வெளியானது தளபதி 68 படத்தின் 2வது லுக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.