"வணக்கம் இந்தியா.. Indian is back" - வெளியானது இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ! - indian 2 story
Indian 2 movie glimpse: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ்( glimpse video) வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Published : Nov 3, 2023, 5:53 PM IST
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஊழல், லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து 1996இல் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தில் கமல் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஊழல் மற்றும் லஞ்சத்தால் தனது மகளை இழக்கும் சேனாதிபதி, ஒரு கட்டத்தில் லஞ்சம் வாங்கும் தனது மகனையே கொல்ல துணிவார். இயக்குநர் ஷங்கரின் விறுவிறுப்பான காட்சியமைப்பால் இந்தியன் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அனிருத் இசையமைத்துள்ள இரண்டாம் பாகத்தில் கமலுடன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல தடங்கல்களைச் சந்தித்து வந்தது. கரோனா தொற்று, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழப்பு என பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடைசியாக இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங் பணிகள் தொடங்கிய வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டது. கமல்ஹாசன் தனது பிறந்தநாளை வரும் 7ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை (glimpse video) அவரது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/GmyX0mfMd8#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…
">Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/GmyX0mfMd8#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/GmyX0mfMd8#Indian2 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…
தமிழில் மட்டுமல்லாது மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப்பும், தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும் வெளியிட்டனர். இந்த இந்தியன் 2 வீடியோவில் நாட்டின் தற்காலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது போலவும் அதனால் சேனாதிபதி இந்திய நாட்டிற்குத் திரும்புவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில் சேனாதிபதி ‘வனக்கம் இந்தியா indian is back' என கூறுகிறார். இந்த அறிமுக வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படக்குழுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்