ETV Bharat / entertainment

கமல்ஹாசன் என்னும் திரைக்கலைஞன் தமிழ் சினிமாவுக்கு தந்த அழியா சுவடுகள்! - கமலஹாசன் பிறந்தநாள்

Kamal Haasan Birthday Special: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் கமல்ஹாசன், இன்று (நவ.7) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கமல்ஹாசன் திரை உலக பயணத்தை சுருக்கமாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

kamal Haasan Birthday
கமலஹாசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:30 AM IST

Updated : Nov 7, 2023, 2:01 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திரையுலகினர் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கமலஹாசன் அறிமுகம்: குழந்தையாக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது மழலை மாறாத குரலில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற பாடலைப் பாடி தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.

இந்த பாடலினால் 1960ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகன், அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின் திரையுலகில் கொண்ட முழு ஈடுபாடு காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் முன்னேறி வந்தார்.

அங்கீகாரம் அவதரித்த கதை: கமல்ஹாசனின் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த இயக்குநர், பாலச்சந்தர். இவர் இயக்கிய “அரங்கேற்றம்” படத்தில் கமல் நாயகனாக அறிமுகமானார். அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகிய‌ படங்கள் கமலுக்கு வெற்றியைத் தேடி தந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

நடிகன் நாயகனாக உருவெடுத்த காலம்: தனது ஆரம்ப காலத்தில் இளமை நாயகனாக மட்டுமே நடித்து வந்த கமல்ஹாசன், பின் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து, தன்னை நடிகனாக செதுக்கிக் கொண்டார். அதற்கு இயக்குநர்களாகிய பாலச்சந்தர், பாரதிராஜா, விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலு மகேந்திரா, சந்தானபாரதி ஆகியோரும் காரணமாக அமைந்தனர். 80களில் தொடங்கிய இந்த திரைப்பயணம், தற்போது வரை முடியவில்லை.

வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சலங்கை ஒலி, குணா, மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, தேவர் மகன் படங்கள் கமல்ஹாசனுக்கு காலம் கடந்தும் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. கமல்ஹாசன் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட படம் என்றால், தேவர் மகன் தான்.

கமல்ஹாசன் எனும் இயக்குநர்: நடிப்பு மட்டுமின்றி படங்கள் இயக்குவதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களுக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என இவர் இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாகப் பார்க்கப்படுகிறது.

விருதுகளை வென்றெடுத்த நாயகன்: பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை என்ற படத்திற்காக முதன் முதலில் தேசிய விருது பெற்றார், கமல். 1987ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன், 1992ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான தேவர் மகன், 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த இந்தியன் ஆகிய படங்களுக்கும் தேசிய விருது பெற்றார். தமிழ் சினிமாவின் ஏராளமான விருதுகளைப் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்தார்.

தமிழக அரசு விருது, பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் விருது என அனைத்து விருதுகளும் இவரை விரும்ப ஆரம்பித்தன. கலைத்தாயின் இளைய மகனாகவே அனைவராலும் பார்க்கப்பட்டார். இவர் நடித்த 7 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய கலைஞன்: தமிழ் சினிமாவில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல். குருதிப்புனல் படத்தில் டால்பி ஸ்டீரியோ சவுண்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். கம்ப்யூட்டர் முதல் முறையாக விக்ரம் படத்தில் காட்டப்பட்டது. தமிழ் சினிமாவில் ப்ளூ மேட் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம், விக்ரம். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு கேரக்டரை எப்படி எடுத்தார்கள் என்பதை யாராலும் கனிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

நாயகன் மீண்டும் வரார்: சமீப காலமாக சில படங்கள் இவருக்கு தோல்விகளாக அமைந்தன. பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. இந்த படத்தின் மூலம் தன்னை மீண்டும் நாயகனாக முடி சூட்டிக்கொண்டார் கமல்.

இதையும் படிங்க: இணையத்தில் பரவும் ஆபாச வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுவது என்ன?

Last Updated : Nov 7, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.