ETV Bharat / entertainment

Jawan box office collection : விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் 'ஜவான்' - box office collection

Jawan box office : இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் 500 கோடி ரூபாய் வசூலை கடக்க உள்ளதாக படக்குழு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Jawan box office collection
Jawan box office collection
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 2:14 PM IST

ஐதராபாத்: அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தி சினிமா வரலாற்றில் படம் வெளியான முதல் நாளில் 129 கோடி வசூல் செய்து அதிகபடியான வசூலை பெற்ற படம் என்னும் சாதனையை படைத்துள்ளது. மேலும், படம் வெளியான மூன்றே நாளில் 384.69 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஜவான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

ரூ 500 கோடி கிளப்: படம் வெளியாகி ஐந்தாம் நாளில் உலக அளவில் ஜவான் திரைப்படம் ரூபாய் 500 கோடி வசூல் செய்து பாக்ஸ் அபிஸில் சாதனை படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் படம் நல்ல வசுலை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு ‘சைரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

2023ம் ஆண்டில் வெளியான பதான் மற்றும் கடார் 2 படங்களுக்கு பிறகு ரூ.300 கோடி வசுலை தாண்டியுள்ள 3வது இந்தி மொழி படமாக ஜவான் உருவாகியுள்ளது. ஜவான் திரைப்படம் வெளியாகி இரண்டாவது நாளில் ரூ. 53.23 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் ரூ.77.83 கோடியும், ரூ.80.5 கோடியும் வசூலித்துள்ளது.

மேலும், வார இறுதி நாளான நேற்று ஜவான் படம் திரையிட்டுள்ள திரையிறங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் ரூ. 500 கோடி வசுலை கடந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாருக்கான் அடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடித்து வரும் டுங்கி திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “என் வாழ்க்கை கோலத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான்” - விஜய் சேதுபதி குறிப்பிட்ட பிரபலம் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.