ஹைதராபாத்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் இதன் வரிசையில், த்ரில்லர், ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடியாக உருவான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள முன்னனி நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி என ஏராளாமான நடிகர் பட்டாளம் நடித்து இருந்தனர்.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பீஸ்ட் படத்தின் சொதப்பலுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நெல்சன். இப்படம் வெளியான முதல் வாரத்தில் 48 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இந்நிலையில் உலகளவில் தற்போது வரை 600 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
600 கோடி ரூபாய் கிளப்பில் இடம் பெற்றுள்ள தென்னிந்தியா படங்களின் பட்டியலில் தற்போது ஜெயிலர் படமும் இணைந்துள்ளது. மேலும் ஜெயிலர், இந்திய அளவில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக 315 கோடியே 95 லட்ச ரூபாயும், உலக அளவில் 607 கோடியே 29 லட்ச ரூபாயும் வசூலித்து சாதித்து உள்ளது.
இதனால் நெட்டிசன்கள் இணையத்தில் 'நாம ஜெயிச்சுட்டோம் மாறா' என்ற மீம்ஸ்களை தெரிக்கவிட்டு வருகின்றனர். அதே சமயம் 18 ஆம் நாளில் மட்டும் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 7.5 கோடி ரூபாய் ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 600 கோடி வசூல் கிளப்பில் நுழைந்த இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையையும் ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னராக எந்திரன் 2ஆம் பாகம் படம் ரூ.600 கோடி கிளப்பில் நுழைந்து சாதனை படைத்து இருந்தது. இதில் என்ன அதிசயம் என்றால், 2 படங்களுமே ரஜினிகாந்தின் படங்கள். ஜெயிலர் வெளியாகி 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஆகஸ்ட். 27) கூட ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
#Jailer WW Box Office#600CrJailer - HOUSE FULL shows even on 3rd Sunday helps the film to go past the magical ₹600 cr mark on the 18th day.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
||#Rajinikanth #ShivaRajKumar | #Mohanlal|| #2Point0 was the FIRST film to enter this club from Tamil Cinema on the 10th day of its… pic.twitter.com/zVhTidnzbw
">#Jailer WW Box Office#600CrJailer - HOUSE FULL shows even on 3rd Sunday helps the film to go past the magical ₹600 cr mark on the 18th day.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 28, 2023
||#Rajinikanth #ShivaRajKumar | #Mohanlal|| #2Point0 was the FIRST film to enter this club from Tamil Cinema on the 10th day of its… pic.twitter.com/zVhTidnzbw#Jailer WW Box Office#600CrJailer - HOUSE FULL shows even on 3rd Sunday helps the film to go past the magical ₹600 cr mark on the 18th day.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 28, 2023
||#Rajinikanth #ShivaRajKumar | #Mohanlal|| #2Point0 was the FIRST film to enter this club from Tamil Cinema on the 10th day of its… pic.twitter.com/zVhTidnzbw
600 கோடி கிளப்பில் நுழைந்த தென்னிந்திய படங்கள்:
- பாகுபலி 2 - ரூ.1,810.59 கோடி
- ஆர்ஆர்ஆர் - ரூ.1,276.20 கோடி
- KGF 2 - ரூ.1,259.14 கோடி
- எந்திரன் - ரூ.800 கோடி
- பாகுபலி - ரூ.650 கோடி
- ஜெயிலர் - ரூ.607.29 கோடி
இதையும் படிங்க: Jawan booking: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஜவான் டிக்கெட்டுகள்!