சென்னை: பட்டாம்பூச்சி படத்தைத்தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ’எண்ணித்துணிக’. அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். மேலும், ஜி. மாரிமுத்து, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெயின் ஆப் ஆரோவ்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை எம்.எஸ்.எம் மூவிஸ் டிரேடர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ’எண்ணித்துணிக’ படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ரஜினியிடம் ஆசி பெற்ற மாதவன்!