ETV Bharat / entertainment

சாதியை மையமாக வைத்துப் படங்கள் எடுப்பது அந்தந்த இயக்குநரின் சுதந்திரம் - நடிகர் ஆர்யா பளீச் பதில் - நெல்லையில் ஆர்யா

சாதியை மையமாக வைத்து அதிகப்படங்கள் வெளியாவதால் தமிழ் சினிமாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும்; அது அந்தந்த இயக்குநர்களின் கற்பனைத் திறனுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

சாதியை மையமாக வைத்து படங்கள் எடுப்பது அந்தந்த இயக்குநரின் சுதந்திரம் - ஆர்யா

author img

By

Published : Sep 2, 2022, 9:15 PM IST

திருநெல்வேலி: நடிகர் ஆர்யா நடித்துள்ள ’கேப்டன்’ திரைப்படம் வரும் எட்டாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.

அப்போது நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். நிகழ்ச்சியில் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, நடிகர் ஆர்யா பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, ' 'கேப்டன்' திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 'சூப்பர் மேன்', 'ஸ்பைடர் மேன்' போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் இந்திய சினிமாவில் புது முயற்சியாக இருக்கும். சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகவும் இருக்கும்.

அதிக பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. காடுகளில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. குறிப்பாக கேரளா, ஊட்டி மற்றும் நாட்டின் எல்லைகளிலும் அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது.

கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிகக் குறைவாக இருந்ததால், அதிக நாட்கள் படங்கள் ஓடின. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, அப்போது 100 நாட்களில் கிடைக்கும் வசூல் தற்போது இரண்டு நாட்களிலேயே கிடைத்து விடுகிறது” என்று தெரிவித்தார்.

சாதியை மையமாக வைத்து படங்கள் எடுப்பது அந்தந்த இயக்குநரின் சுதந்திரம் - ஆர்யா

தொடர்ந்து, ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என நிருபர்கள் கேட்டதற்கு 'அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை' எனத் தெரிவித்தார். மேலும் சாதியை மையமாக வைத்து அதிகப்படங்கள் வெளியாவதால் தமிழ் சினிமாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும்; அது அந்தந்த இயக்குநர்களின் கற்பனைத் திறனுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் பணமோசடிப் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.