யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தின் இயக்குநர் இதற்கு முன் சிந்தனை செய் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சன்னி லியோன், சதீஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சதீஷ், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சன்னி லியோன் தமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்துள்ளார் என்று பேசினார்.
இதனையடுத்து சதீஷின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எப்படி உடை உடுத்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி சின்மயி இது குறித்து தனது கண்டனத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இத்தனை கூட்டம் உள்ள இடத்தில் ஒரு பெண்ணை ஆடை அணிவது குறித்து சுட்டிக்காட்டி பேசுவது தவறு. இது ஒன்றும் காமெடி அல்ல. ஆண்கள் இதனை எப்போது நிறுத்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என்றும் மாற்றமே கலாச்சாரம் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஜோதிகா படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சூர்யா!