ETV Bharat / entertainment

இரவின் நிழல் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தேன் - ஏஆர்.ரகுமான்

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் திரைப்படத்தை முதலில் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தாக இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தேன் - ஏஆர்.ரகுமான்!

author img

By

Published : May 2, 2022, 6:55 AM IST

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான் பங்கேற்று பேசினார். அப்போது, "பார்த்திபனை 25 ஆண்டுகளாக தெரியும். ஏற்கனவே ஏலேலோ என்ற படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டியது. ஒத்திகை செய்ததை விட சிறப்பாக படம் பிடித்துள்ளார். ஒரே ஷாட்டில் நான் லீனியர் படம் எடுத்துள்ளது சாதனைதான். பாராட்டக்கூடியது.

தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த மாதிரி படம் எடுப்பது சாதனை. வருங்காலத்தினருக்கு பார்த்திபன் உதாரணமாக திகழ்வார். நம்மூரில் திறமையானவர்களும் இருக்கின்றனர். சித்தர் பாடல் ஒன்றை இப்படத்திற்காக பயன்படுத்தியுள்ளேன். வித்தியாசமான கதை இது. இப்படத்தில் பணியாற்ற ஆசையாக இருந்தது. இந்த ஐடியா சொல்லும்போது பைத்தியகாரத்தனமாக இருந்தது. நல்லா பண்ணுவீங்கன்னு நினைத்தேன்" என்றார்.

இரவின் நிழல் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தேன் - ஏஆர்.ரகுமான்!
இரவின் நிழல் பைத்தியகாரத்தனமான யோசனை என நினைத்தேன் - ஏஆர்.ரகுமான்!

உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படமாக தயாராகியுள்ள இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் ஆசியன் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரூ.16 கோடி வரை செலவானது. மொத்தமாக ரூ.21 கோடி செலவானதாக கூறப்படுகிறது.

இவ்விழாவில் பார்த்திபன், ஏஆர்.ரகுமான், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் சசி, எழில், அஜயன் பாலா, சமுத்திரக்கனி, மதன் கார்க்கி, டிஜெ.ஞானவேல், சுரேஷ்காமாட்சி, கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க :நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.