மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள "இரட்டா" படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 21) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஜோஜு இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி. கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தமிழ் - மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனப். ஏற்கனவே மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜுக்கு அவரது கேரியரில் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதை இந்த டிரைலர் உறுதிப்படுத்துகிறது.
பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 'இரட்டா' படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி தவிர, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவு செய்ய, அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுதியுள்ளனர். மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோவின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை கே.ராஜசேகரின் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘இரட்டா’ படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி!