இயக்குநர் ஷங்கர், கமல் ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கத்திட்டமிட்டார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது. எப்போதோ தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டது.
மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கமல்ஹாசன் சட்டப்பேரவை தேர்தல் பணியில் பிஸியானது போன்ற காரணங்களால் இந்தியன் - 2 படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதற்கிடையில், தெலுங்கில் ராம் சரணை வைத்து தனது புதிய படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ படத்தில் நடித்தார். அப்படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.
இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்குப்பிறகு ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 24ஆம் தேதி சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழுவினர் உடன் கமல்ஹாசன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.