இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இவரது படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டன.
-
All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022
இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் தனது தம்பி மகனான இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அந்தக் காணொலியில் தெலுங்கிலேயே பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், இளையராஜா.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’இரண்டு ராஜாக்கள்’ இசை கூட்டணியில் உருவாகும் வெங்கட் பிரபு திரைப்படம்!!