தூத்துக்குடி: நடிகர் ஜான் விஜய் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹைடு அவுட் என்ற ஸ்னூக்கர் விளையாட்டு அரங்கத்தை நேற்று திறந்து வைத்து ஸ்நூக்கர் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மிகவும் புதுமையான நகரம் இங்கு பொழுது போக்கிற்காக எவ்வித வசதியும் இல்லாத நிலையில் இந்த ஸ்நூக்கர் விளையாட்டு அரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி குழந்தைகளுக்கு ஸ்னூக்கர் விளையாட்டு குறித்து கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர். சார்பட்டா 2 பரம்பரை படம் குறித்து வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் ஆனால் எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. மேலும், தான் பல்வேறு திரைக்கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும், எனது நடிப்பு வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் தான் எழுதி வைத்த கதைகளை இயக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நடிகர் ஜான் விஜய், பில்லா, மௌன குரு, கலகலப்பு, ஓரம் போ, கபாலி என பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈஸ்டர் பண்டிகை - தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் தத்துரூப நிகழ்ச்சி!