ETV Bharat / entertainment

புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சீனு ராமசாமியின் இடிமுழக்கம் தேர்வு..! - vijay sethupathi

Pune International Film Festival: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் இடிமுழக்கம் திரைப்படம் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி உள்ளது.

Pune International Film Festival
புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சீனு ராமசாமியின் இடிமுழக்கம் தேர்வு..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 7:38 PM IST

Updated : Dec 24, 2023, 8:12 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை , தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற மனித உணர்வுகளைப் பற்றிப் பேசும் படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் இடிமுழக்கம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Skyman Films International) கலைமகன் முபாரக் தயாரிக்கின்றார். இத்திரைப்படம் தொடங்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்கு NR ரகுநந்தன் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். மேலும், இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக, இயக்குநர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிப்பில், இயக்கிய மாமனிதன் திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இடிமுழக்கம் திரைப்படம் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “எனது இயக்கத்தில் உருவான இடிமுழக்கம் திரைப்படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வானதில் எனக்கும், எனது படக் குழுவினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியுமாகும்.

இந்த விழாவிற்காகத் தகுதி பெற்ற திரைப்படம், ரசிகர்கள் மனதிலும் இடம் பெறுவதற்கானத் தகுதியையும் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்னுடைய எல்லாத் திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவைப் போல இத் திரைப்படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: கோவை - பொள்ளாச்சி புதிய ரயில்..! அமைச்சர் எல்.முருகன் துவங்கி வைத்தார்!

Last Updated : Dec 24, 2023, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.