ETV Bharat / entertainment

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்... சந்தானம் - arya captain

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகத்தில் ஆர்யா நடித்தால் தானும் நிச்சயம் நடிப்பேன் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்

author img

By

Published : Aug 26, 2022, 7:53 AM IST

டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம் கேப்டன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், தவுபிக் ஷெர்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பவர் சக்தி சௌந்தர் ராஜன். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி, ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

அடுத்த மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, இமான், மதன் கார்க்கி, சந்தானம், தயாரிப்பாளர் தாணு, ஆர்பி.சவுத்ரி, விஷ்ணு வர்தன், அமீர், சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் பேசியது, "ஆர்யாவுக்கு வாழ்த்துகள். டெடி படத்திற்கு பிறகு மீண்டும் பணியாற்றுகிறோம். இயக்குனர் உங்களை நன்றாக வேலை வாங்கியுள்ளார். அதன் பலன் ஸ்கீரினில் தெரிகிறது. இயக்குனரின் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். கார்க்கியுடன் அடுத்தடுத்து பணிபுரிந்து வருகிறேன். நினைவுகள் பாடலை பாடிக்கொடுத்த டார்லிங் யுவனுக்கு நன்றி. இப்படத்தில் வரும் ஒரு ஆங்கில பாடலையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என பேசினார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்

மதன் கார்க்கி பேசியபோது, என் இனிய தனிமையே லாக்டவுனில் அனைவருக்கும் ஆறுதலாக இருந்ததாக நிறைய பேர் கூறியுள்ளனர். கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. யுவன் நினைவுகள் என்ற பாடலை அற்புதமாக பாடியுள்ளார். அனைவருக்கும் நன்றி என கூறினார்.

நடிகர் ஆர்யா கூறியதாவது, கேப்டன் தலைப்பு ஆர்பி. சௌத்ரி தான் எனக்கு கொடுத்தார். அவருக்கு நன்றி. இயக்குனர் மீதுள்ள நம்பிக்கை தான் இப்படம். டெடி படம் கதை சொல்ல வரும்போது இயக்குனருக்கு கதை சொல்ல தெரியாது. இப்போது நன்றாக இம்ப்ரூவ் செய்துள்ளார். இப்படத்திற்கு இமானின் இசை முதுகெலும்பாக இருந்துள்ளது. இரண்டு முறை என்னை இயக்குனர் கொலை செய்யப் பார்த்தார்‌. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்தோம். ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் பயங்கரமாக இருக்கும்.

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் பேசியது, "நான் இயக்கிய படங்களிலேயே கேப்டன் கடினமான படம். என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. நமது ஊரில் இந்த பட்ஜெட்டில் இதுவரை யாரும் பண்ணியதில்லை. இதை சாத்திய மாக்கியவர்களுக்கு நன்றி".

நடிகர் சந்தானம் பேசுகையில், "காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு மீண்டும் காமெடி வாய்ப்புகள் வந்தன. கெஸ்ட் ரோல் பண்ணவும் கேட்டார்கள். ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகத்தில் ஆர்யா நடித்தால் நானும் நிச்சயம் நடிப்பேன். இதனை அந்த படத்தில் நடிக்கும் போதே ஆர்யாவிடம் சொன்னேன்.

உன் உடம்புக்கு அர்னால்டு மாதிரி ஏலியனிடம் சண்டை போடாமல் கும்பகோணத்துல வந்து காமெடி படம் பண்ணிட்டு இருக்க என்று கிண்டல் செய்தேன். அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.

இதையும் படிங்க: ரசிகர்கள்தான் எனது எனர்ஜி... கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.