ETV Bharat / entertainment

'குட் நைட்' கூட்டணியின் அடுத்த படைப்பான "லவ்வர்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - Lover Movie First Look

Lover Movie First Look : மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

லவ்வர்
லவ்வர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 4:07 PM IST

சென்னை: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் (Youtube சீரிஸ் லிவ்இன் புகழ்) இயக்கத்தில் குட்நைட் மணிகண்டன் நடித்திருக்கும் "லவ்வர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி அழகாக பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகி உள்ளது.

அனைவரையும் கவரும் வகையில், இப்படத்தை ஒரு கமர்ஷியல் கொண்டாட்டமாக, அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கி உள்ளார். ’குட்நைட்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்யவுள்ளார். படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல், பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான தொழில் நுட்பக்குழு இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்னா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது. முன்னதாக மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இக்கூட்டணி இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் ட்ரெயின் - பூஜையுடன் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.