ETV Bharat / entertainment

முதல்முறையாக விண்வெளியில் நடக்கவுள்ள படபிடிப்பு - யூனிவர்சல் ஸ்டுடியோ

பிரபல நடிகர் டாம் க்ரூஸை வைத்து முதன் முதலாக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தப்போவதாக யூனிவர்சல் ஸ்டுடியோஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக விண்வெளியில் நடக்கவுள்ள படபிடிப்பு

author img

By

Published : Oct 13, 2022, 10:24 PM IST

உலகம் முழுவதும் பிரபலாமன ஹலிவுட் நடிகரான டாம் க்ரூஸை வைத்து முதன் முதலாக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தப்போவதாக யூனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த யூனிவர்சல் ஸ்டுடியோவின் தலைவர் டேம் டோன்னா லேங்க்லி கூறுகையில், “டாம் குரூஸ் உலகை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். டாம் க்ரூஸுடன் ஒரு சிறந்த திட்டம் உள்ளது.

ராக்கெட் மூலம் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியே விண்வெளி நடைபயணம் செய்த முதல் குடிமகன் என்ற பெருமையை பெறவுள்ளார். இதற்காக ஒரு குழு தற்போது நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமூகமான உற்பத்தியை உறுதி செய்து வருகிறது.

அதன்படி, விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் ஹாலிவுட் ஸ்டுடியோ இதுவாகும்” என தெரிவித்துள்ளார். 60 வயதான டாம் க்ரூஸ், தற்போது வரையில் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் ரியலாக விமானத்தில் தொங்குவது போன்ற ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இவர் கடந்த 2020ஆம் ஆண்டே விண்வெளியில் தன் படத்தின் படபிடிப்பை நடத்திக் போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வசூலில் விக்ரம் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.