ETV Bharat / entertainment

விஜய்க்கு மிருக தோஷமா… ’லியோ’ திரைப்பட ரிசல்ட் கூறுவது என்ன? - leo collection

லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், மிருகங்கள் பெயரை தலைப்பாக வைக்கப்படும் விஜய் படங்கள் தோல்வி அடைந்தததால், நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்க்கு மிருக தோஷமா
விஜய்க்கு மிருக தோஷமா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:32 PM IST

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வகையில் இருக்கும். ரஜினி படங்களின் வசூலைக்கூட இவரது படங்கள் முறியடித்த வரலாறு உண்டு. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று வெளியானது.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். அது மட்டுமின்றி ஹாலிவுட் சினிமாவில் வருவது போல் தனக்கென ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதி மோசமான திரைக்கதையுடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது. ஆனால் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நடுநிலை ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகமே.

இந்த நிலையில் மற்றொரு விஷயமும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் இருக்கிறது என்றும், அதனால் மிருகங்களின் பெயரை‌ தலைப்பாக வைத்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்து நிறைய மீம்ஸ்களும் உலா வருகின்றன. அப்படி விஜய் நடித்து மிருகங்கள் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விமர்சனங்களை பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.

குருவி

இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து மிகப் பெரிய ஹிட்டடித்த படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்கான கில்லி, தமிழில் விஜயின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் தரணி, விஜய், த்ரிஷா கூட்டணி 2008ஆம் ஆண்டு குருவி படத்தில் இணைந்தது. குருவி படம் மூலம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பாளராக தங்களது திரை வாழ்வை தொடங்கியது. ஆனால் குருவி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மோசமான திரைக்கதையால் தோல்விப் படமாக அமைந்தது.

சுறா

இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து 2010ஆம்‌ ஆண்டு வெளியான திரைப்படம் சுறா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் சுறா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. விஜய் ரசிகர்கள் மறக்க வேண்டிய படமாகவும் இது அமைந்தது. இது நடிகர் விஜய்க்கு 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

புலி

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் புலி திரைப்படம் ரசிகர்களுக்கு சோதனையை கொடுத்த படமாக மாறியது. புலி திரைப்படம் படுதோல்வி பட்டியலில் இணைந்தது. இதில் அப்பா விஜய்யின் தோற்றமும் அப்போது சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டது. சிம்புதேவனின் வழக்கமான ஃபேண்டஸி விஷயங்கள் இதில் எடுபடவில்லை என்பதே உண்மை.

பைரவா

2017ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பைரவா. அழகிய தமிழ்மகன் படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பரதன், விஜய் கூட்டணியில் வெளியான படம் பைரவா. பழைய காலத்து திரைக்கதையால் பைரவா திரைப்படம் சுத்தமாக எடுபடவில்லை. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், அது படத்தின் வெற்றிக்கு உதவவில்லை. பைரவா திரைப்படம் தோல்வி பட்டியலில் இணைந்தது.

பீஸ்ட்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் மூலம் டார்க் காமெடி படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்த இயக்குநர் என அறியப்பட்ட நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட்.‌ 2022இல் வெளியான பீஸ்ட் விஜய், நெல்சன் இருவருக்கும் வாழ்நாள் சோதனை படமாகவும், மறக்க வேண்டிய படமாகவும் மாறியது. மோசமான கதை, அதைவிட சுவாரஸ்யமற்ற திரைக்கதை, சிரிப்புக்குள்ளான வில்லன் கதாபாத்திரம் என படம் ஒட்டு மொத்தமாக சறுக்கியது.‌ பீஸ்ட் விஜய் திரை வாழ்வில் மற்றொரு தோல்வி படமாக கருதப்படுகிறது.

இந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜின் லியோ படமும் இணைந்துள்ளது. இப்போது வரை லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், படம் நன்றாக வசூல் செய்தாலும் சிறந்த படம் இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதன்‌ மூலம் நடிகர் விஜய்க்கு மிருக தோஷம் உள்ளது என்றும், விலங்குகளால் அவருக்கு ராசி இல்லை என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: உலக வசூல் சாதனையில் ஜவானை பின்னுக்குத் தள்ளிய லியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.