ETV Bharat / entertainment

'நாம பேசாம அரசியலுக்கு போயிருவோமா..?' : SK கலாய்க்கும் 'டான்’ ட்ரெய்லர்!

author img

By

Published : May 6, 2022, 10:09 PM IST

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘டான்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது.

’நம்ம பேசாம அரசியலுக்கு போயிருவோமா..?’ : SK கலாய்க்கும் 'டான்’ டிரைலர்

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவிருக்கும் ’டான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்தப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் வழக்கமான துள்ளலான திரைத் தோற்றத்தில் ஜொலிக்கிறார்.

இந்தப்படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். கல்லூரி முதல்வராக எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி, மற்றும் சிவாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் வழக்கம் போல் கியூட்டாக ட்ரெய்லரில் ஜொலிக்கிறார். இதைத் தவிர்த்து சிவாங்கி, பாலசரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், ராஜூ என நடிகர் பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரின் இறுதியில் சிவகார்த்திகேயன் “நாம பேசாம அரசியலுக்கு போயிருவோமா..?” என கேட்கும் வசனத்தின் மூலம் லேசாக அவர் அரசியலை சாடுவது போல் தெரிகிறது. காமெடி - சென்டிமென்ட் கலந்த கமர்சியல் கதையாக இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளதாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கூறியிருந்தார்.

சமீபத்தில் விஜய் நடித்து வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு கல்லூரியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் இது தான். இப்படத்தின் இயக்குநர் சிபிசக்கரவர்த்தி, இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீதக்காதி பகுதி 1: “இயக்குநர் ருத்ரய்யா”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.