ETV Bharat / entertainment

Bakasuran: பிரஸ் மீட்டில் 'பகாசூரன்' மொத்த கதையும் சொன்ன மோகன் ஜி! - Bakasuran Movie its should

'பகாசூரன்' திரைப்படத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் செல்போன்களால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 17, 2023, 8:41 AM IST

பகாசூரனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் - இயக்குனர் மோகன் ஜி!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பகாசூரன்(Bakasuran). இப்படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜ், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சர்ச்சைக்குரிய விஷயங்களைச் சொல்லும் மோகன் ஜி இயக்கியுள்ள படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் இன்று பிப்.17 திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்படத்தின் மோகன் ஜி கூறியதாவது, 'படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி உள்ளனர். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மக்களுக்குத் தேவையான படம். அடுத்த 10 வருடங்களுக்கு இப்படம் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கதையை இந்தியில் உள்ள ஒரு நடிகரிடம் சொன்னேன். ஆனால், அது நடைபெறவில்லை. இப்படத்தில் செல்வராகவன் நடித்தது மிகவும் கடினமான பாத்திரம். ரெகுலர் நடிகர் நடித்தால் புதுமையாக இருக்காது என்பதால் செல்வராகவனை நடிக்க வைத்தேன்.

இப்போதும் இக்கதையில் வருவது போல் நிறையக் கல்லூரிகளில் நடக்கிறது. பேசப்படாமல் உள்ளது. அப்பாவி பெண்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்று இதில் சொல்லியுள்ளேன். கோவையில் நடந்த விஷயம் உள்ளிட்டவற்றைச் சேர்த்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எதாவது இதிகாசத்துடன் இணைத்துக் கதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போதுதான் பார்க்க பவர்ஃபுல்லாக இருக்கும். திட்டமிட்டுச் செய்கிறேன் என்று சொல்லிச் சொல்லித்தான் மிகப் பெரிய பிம்பத்தை உருவாக்கிவிட்டீர்கள். இதுபோன்று‌ செய்யாதீர்கள். படத்தில் வரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரம் கேட்டால் நான் எங்கே செல்வது.

செல்போனால் ஆண், பெண் இருவருக்குமே பிரச்சினை உள்ளது. ஆனால், பெண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு இப்படம் சென்று சேர வேண்டும் என்பது என் நோக்கம். பிரச்சனையில் சிக்கும் பெண்கள் நிச்சயம் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். ராதாரவியிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று கெஞ்சினேன். ஆனால், அவர் அடம்பிடித்து இப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்' என்று தெரிவித்தார்.

இந்த பகாசுரன் திரைப்படத்தில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் ஆண்களைக் கொலை செய்யும் கதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பில் செல்வராகவன் நடித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து எழும் பிரச்சினைகளுக்குப் பழிவாங்குதலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அம்சம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: "டாடா" படக்குழுவினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.