ETV Bharat / entertainment

தயாராகும் தேசிங்கு ராஜா 2ம் பாகம்! மீண்டும் இணையும் எழில் - வித்யாசாகர் கூட்டணி! - Vimal

Desingu Raja 2: கடந்த 2013 ஆம் ஆண்டு விமல், பிந்துமாதவி, சூரி நடிப்பில் எழில் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

தயாராகும் தேசிங்கு ராஜா 2ம் பாகம்
தயாராகும் தேசிங்கு ராஜா 2ம் பாகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:04 PM IST

சென்னை: நடிகர் விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம், ராஜா’, பிரபுதேவா, சரத்குமார் ஆகியோரின் “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவியின் ‘தீபாவளி’ உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனநராக இருந்த எழில், அதன்பிறகு தனது பாணியை மாற்றி காமெடி படங்களை இயக்கி வந்தார். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்களை இயக்கினார்.

குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல், அதிரும் காமடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படி கடந்த 2013 ஆம் ஆண்டு விமல், பிந்துமாதவி, சூரி நடிப்பில் எழில் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

தேசிங்கு ராஜா படத்தில் கதாநாயகனாக நடித்த விமல், தேசிங்கு ராஜா 2 கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் நடிகர் விமல், இயக்குநர் எழில் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தில் இரண்டாவது முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனா நடிக்கிறார், தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எழில். இப்படத்தில் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார். அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் இயக்குநர் எழில் மீண்டும் இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: மே 9-இல் வெளியாகிறது 'கல்கி 2898-AD'.. கமல் - பிரபாஸ் கூட்டணிக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு கோடை விருந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.