ETV Bharat / entertainment

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மதுரை தம்பதி மீது தனுஷ் வழக்கு!! - Dhanush send legal notice to Madurai couple who claimed actor Dhanush as their son

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி மான நஷ்டம் கேட்டு மதுரை தம்பதி மீது தனுஷ் வழக்கு

author img

By

Published : May 21, 2022, 12:58 PM IST

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

இந்த நிலையில் தங்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி கதிரேசன் தம்பதி நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

claim Dhanush parents
ரூ.10 கோடி மான நஷ்டம் கேட்டு மதுரை தம்பதி மீது தனுஷ் வழக்கு

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: 'சினிமாவில் 20 ஆண்டுகள். நான் இந்த அளவிற்கு வருவேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை' - நன்றி கூறிய தனுஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.