ETV Bharat / entertainment

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு! - sivaraj kumar

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு

author img

By

Published : Jan 22, 2023, 7:47 PM IST

பெரும் பாராட்டுகளைக் குவித்த 'ராக்கி' , 'சாணி காயிதம்' ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்‌, தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன், கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இவர்களுடன் மேலும் இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது இந்த படத்தினுடைய மேக்கிங் க்ளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் படத்திற்கான அரங்குகள் அமைப்பது பற்றி காட்டப்பட்டுள்ளது. தனுஷை புதிய பரிமாணத்தில் இதில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முந்தைய இரண்டு படங்களையும் வித்தியாசமான திரைக்கதையால் இயக்கி சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் இடம் பிடித்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ’ராக்கி’ திரைப்படமும் , கடந்த ஆண்டு செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ’சாணி காயிதம்’ படமும், என இரண்டுமே வித்தியாசமான ரிவெஞ்சு கதைக்களமாகவே அமைக்கப்பட்டிருக்கும். எனவே, தனுஷுடன் அருண் மாதேஸ்வரன் இணைந்திருக்கும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இப்படி அடுத்தடுத்து வரும் தனுஷ் படங்களின் அப்டேட்டுகள், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 'வாரிசு' சக்சஸ் - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.