ETV Bharat / entertainment

இருள் ஆளும் 'டிமான்டி காலனி 2': வெளியான ஃபர்ஸ்ட் லுக்! - Priya Bhavani Shankar

அருள்நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி 2' (Demonte Colony 2) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 8, 2023, 5:28 PM IST

ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் 'டிமான்டி காலனி 2' படத்தின் முதல் பார்வை போஸ்டர் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா ரசிகர்கள் குறிப்பாக, ஹாரர் பட (Tamil Horror Movie) ரசிகர்களிடையே 'டிமான்டி காலனி' திரைப்படம் அதன் புதுமையான கதை சொல்லலுக்கும் உறைய வைக்கும் காட்சிகளுக்காகவும் புது பிராண்டாக உருவானது. நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது 'டிமான்டி காலனி 2' (Demonte Colony 2) என்ற படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக, 'இருள் ஆளப்போகிறது' என்ற போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த போஸ்டர்களில் QR கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம். இது போன்ற புது யுக்திகள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

படத்தின் 40% படப்பிடிப்பு முதல் ஷெட்யூலுடன் முடிவடைந்து அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. படத்தின் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் & படத்தின் தயாரிப்பாளரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

QR-யை ஸ்கேன் செய்து முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம்.

'டிமான்டி காலனி 2' படத்தின் டேக்காக 'Vengeance of Unholy' பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நவதேவி ராஜ்குமார் & மாலினி, அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை மற்றும் விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பீடுகளுடன் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க: வாரிசு, துணிவு படங்களின் முன்பதிவு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.