ETV Bharat / entertainment

ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே லுக் வெளியீடு! - ப்ராஜெக்ட் கே

பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Deepika Padukone first look release in Project K
ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே லுக் வெளியீடு
author img

By

Published : Jul 18, 2023, 12:33 PM IST

சென்னை: தெலுங்கு சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் நடிகராக இருப்பவர் பிரபாஸ்.‌ பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் உலகலாவிய நடிகராக மாறி உள்ளார். இவரது படங்கள் பல ஆயிரம் கோடி வியாபாரம் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவு கதை படைப்புதான் ப்ராஜெக்ட் கே. சான் டியாகோ காமிக்கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது 'ப்ராஜெக்ட் கே'. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: Merry Christmas - விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்' பட வெளியீட்டுத்தேதி அறிவிப்பு!

இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்த் இருக்கிறது. ப்ராஜெக்ட் கே படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கில் தீபிகா படுகோனின் தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் தோற்றம், கதையில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆர்வமாக உள்ளது போல் உள்ளது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் அறிவியல் புனைவு கதைக்கான நாடகத்தை எதிர்கொள்ளும் ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்காக 'ப்ராஜெக்ட் கே’ வை சிறப்பாக வடிவமைத்து உள்ளார்.

இதையும் படிங்க: ileana d'cruz : நடிகை இலியானாவின் காதலன் இவர்தானா? - முதல்முறையாக புகைப்படங்களை வெளியிட்ட 'கேடி' நடிகை!

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டாளம், வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிகள், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான திரைக்கதை ஆகியவற்றுடன் இந்த திரைப்படம் தயாராவதால் வரும் ஆண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த திரைப்படம் மாறி உள்ளது.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கண்ணிவெடி முதல்.. செல்வராகவனின் தத்துவம் வரை சினிமா அப்டேட்கள்!

'ப்ராஜெக்ட் கே' 2024 ஆண்டு ஜனவரி 12-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது. தீபிகா படுகோனின் ரசிகர்கள் தற்போது அந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: Jailer Second Single: வெளியானது சூப்பர் ஸ்டாரின் ஹுக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.