ETV Bharat / entertainment

டூப் இல்லாமல் அந்தரத்தில் நடித்த ’கேப்டன் விஜயகாந்த்’; ஏவிஎம் வெளியிட்ட வீடியோ வைரல்!! - aruna guhan tweet

’சேதுபதி ஐ.பி.எஸ்’ படத்தில் நடிகர் விஜயகாந்தின் அர்ப்பணிப்பு பற்றி சுவாரஸ்யமான தகவலை ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டூப் இல்லாமல் அந்தரத்தில் நடித்த ’கேப்டன் விஜயகாந்த்’

author img

By

Published : Jul 1, 2022, 10:37 AM IST

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன், சத்ரியன், வல்லரசு, வாஞ்சிநாதன், என பல ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் 1994ஆம் ஆண்டு இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் வெளியான சேதுபதி ஐ.பி.எஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை பிரபல ஏவிஎம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்த் மணிக்கூண்டில் ஏறி அதில் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்க செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ’சேதுபதி ஐ.பி.எஸ்’ படம் பற்றி சுவாரஸ்யமான தகவலை ஏவிஎம் சரவணனின் பேத்தி அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கயிறு அல்லது தொழில்நுட்பம் என எதுவும் பயன்படுத்தப்படவில்லை, மேலும் ஸ்டண்ட் டபுள் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடிப்பதில் விஜயகாந்த் சாரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தைப் பற்றி தத்தா பேசியுள்ளார். மணிக்கூண்டு கோபுரத்தில் இந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது” என ட்விட் செய்துள்ளார். இதனையடுத்து சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: டிச.14 முதல் சிம்புவின் 'பத்து தல'..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.