ETV Bharat / entertainment

ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை - ஏப்ரல் 14

பாலிவுட்டின் பிரபல ஜோடி ஆலியா பட் - ரன்பீர் கபூருக்கு இன்று (நவ-6) பெண் குழந்தை பிறந்தது.

Etv Bharatஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை

author img

By

Published : Nov 6, 2022, 7:07 PM IST

மும்பை: பாலிவுட்டின் பிரபல ஜோடியான ஆலியா- ரன்பீர் கபூர் இருவரும் இந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரன்பீர் மற்றும் ஆலியா பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி எளிமையான முறையில் மும்பையில் உள்ள வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்திற்கான புரொமஷன் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இன்று (நவ. 6) மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் ஆலியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஆலியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாக எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அவள் ஒரு மாயாஜால பெண். நாங்கள் அதிகாரப்பூர்வமாக அன்பால் நிறைந்த பெற்றோர் ஆகிவிட்டோம் என்று பதிவிட்டிருந்தார். இந்த ஜோடிக்கு திரையுலகமே வாழ்த்து தெரிவித்து வருகிறது.

இதையும் படிங்க:'ரூ.3,000 சம்பளத்திற்கு மழலையர் பள்ளி ஆசிரியையாக வேலை செய்தேன்' - ஸ்வேதா பச்சன் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.