ETV Bharat / entertainment

பாபி சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! - நாயகி மிஷா ரங்

முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில், நடிகர் பாபி சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் மற்றும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாபி சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 5:54 PM IST

சென்னை: சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன் மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் N.S “தடை உடை” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளன எனவும், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை மாவட்ட கிராமப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார்.

கதையின் நாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி, தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தடை உடை படத்தின் அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை Mudhra's film factory சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தடை உடை படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம். எழுத்து இயக்கம் - ராகேஷ் N.S, தயாரிப்பு - ரேஷ்மி மேனன், ஒளிப்பதிவு - K.A.சக்திவேல், இசை - ஸ்ரீ, பின்னணி இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - கவிஞர் வைரமுத்து, படத்தொகுப்பு - பொன் கதிரேஷ் PK, கூடுதல் திரைக்கதை - சாய்ராம் விஷ்வா, லைன் புரடியூசர் - திலீப் குமார், நிர்வாக தயாரிப்பு - R.P.பால கோபி, கலை - M.தேவேந்திரன், மக்கள் தொடர்பு - சதீஷ் உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: 'என் உயிர் தோழன்' நடிகர் பாபு மறைவு! பாரதிராஜா இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.