ETV Bharat / entertainment

’பிளாக் பாந்தர்: வக்கண்டா ஃபாரவர்’ டிரைலர் வெளியீடு; புதிய பிளாக் பாந்தர் அறிமுகம்

author img

By

Published : Oct 4, 2022, 11:02 AM IST

இயக்குநர் ரியான் கூக்லரின் ‘பிளாக் பாந்தர்: வக்கண்டா ஃபாரவர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

’பிளாக் பாந்தர்: வக்கண்டா ஃபாரவர்’ டிரைலர் வெளியீடு ; புதிய பிளாக் பாந்தர் அறிமுகம்

இயக்குநர் ரியான் கூக்லர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாக் பாந்தர்: வக்கண்டா ஃபாரவர்’ படத்தின் டிரெய்லரை மார்வல் ஸ்டூடியோஸ் நேற்று(அக்.3) வெளியிட்டது. பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மன் புற்றுநோயால் பாதிப்படைந்து உயிரிழந்த நிலையில், அவரது கதாபாத்திரமும் இறந்துவிட்டதாகவே இக்கதையையும் அமைத்துள்ளனர்.

இந்த டிரெய்லரே அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டதாக இருக்கும் காட்சியில் தான் தொடங்குகிறது. அதில் தொடங்கி டிரெய்லர் முழுவதும் கேமரா, ஒளிப்பதிவு என்று அனைத்தும் அட்டகாசம். குறிப்பாக இந்த டிரெயலரின் பின்னணி இசை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும், இந்தத் டிரெய்லரில் மார்வெலின் புதிய சூப்பர் ஹீரோவான ’ஐயன் ஹார்ட்’-யும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை டாமினிக் டோர்னெ நடித்துள்ளார்.

மேலும், முதன்முறையாக புதிய பிளாக் பாந்தரை இந்த டிரெய்லரின் இறுதியில் மார்வெல் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக் பாந்தரின் சகோதரியான ஷூரி எனும் கதாபாத்திரம் புதிய பிளாக் பாந்தராவதாகத் தெரிகிறது. இந்த புதிய பிளாக் பாந்தரையும் மார்வெல் ரசிகர்கள் ஏகோபத்திய வரவேற்புடன் வரவேற்று வருகின்றனர். இந்தப் படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகுமெனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் 'ஆதி புருஷ்' டீஸர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.