சென்னை: கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர் எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்". பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த் மேற்கொண்டுள்ளனர்.
'நேற்று இந்த நேரம்' படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியது. இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் ஜனவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளனர். ஷாரிக் ஹாசன் நடித்துள்ள 'ஜிகிரி தோஸ்த்' படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு; மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!