ETV Bharat / entertainment

Sourav Ganguly biopic: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

Aishwarya rajinikanth directs ganguly biopic: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராக உள்ளது. படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

aishwarya rajinikanth is set to direct ganguly's biopic
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் சவ்ரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 12:35 PM IST

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை படமாக எடுக்கப்பட உள்ள நிலையில், அதை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவ்ரவ் கங்குலி. பல டெஸ்ட் போட்டிகளில் சதங்களை அடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த கங்குலி, கிரிக்கெட் உலகத்தில் தன் திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன், கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வரவுள்ளது என தனது சமூக வலைதளங்களில் அறிவித்தார். கங்குலியும் தனது ரசிகர்களுக்காக "கிரிக்கெட் தான் என்னுடைய வாழ்க்கையில் எல்லாம். என்னை தலை நிமிர்ந்து நடக்க வைத்தது இது தான். இந்த கிரிக்கெட் பயணத்ததை எப்போதும் மறக்கமாட்டேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க உள்ளார் எனபதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

பின்னர், அறிவிப்பு வெளியிட்டும் அதனுடைய பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் போனது. இந்நிலையில் மீண்டும் கங்குலியின் வாழ்க்கை பயணத்தை பயோபிக்காக உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் தமிழில் நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் வீட்ல விஷேசம் படத்தின் இந்தி பதிப்பில் நடித்து இருந்தார். இந்தாண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: Raghava Lawrence: ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கிய ராகவா லாரன்ஸ்!

கங்குலியை ஆயுஸ்மான் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் இதற்காக, ஆயுஷ்மான் குரானா சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள போவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கங்குலியின் பயோபிக்கிற்கு நடிகர் ரன்பீர் கப்பூர் தேர்வாகியிருந்தது குறிப்பிடதக்கது.

பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த 'டீரிம் கேர்ள் 2' (Dream Girl 2 ) படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 38 வயதாகும் ஆயுஷ்மான் குரானா, பாலிவுட்டில் ஆவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ 71 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. பாலிவுட் வட்டாரத்தில் இவரை ரசிகர்கள் 'தாதா' என அழைகின்றனர்.

கங்குலியின் ஆரம்ப நாட்களில் இருந்து பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்கள் படமாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் கேப்டன் டோனி ஆகியோரது வாழ்க்கை திரைப்படங்களாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது.

சமீப நாட்களில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்.. கொடைக்கானலில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.