நெல்லை: 2023 பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு நடிகர் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வருகின்ற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரின் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் டிக்கெட்டிகளை முன்னதாகவே ஆர்வமாக வாங்கி வருகின்றனர். அதேபோல் படத்தை புரொமோஷன் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு இணையாக ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு, திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் கட் அவுட் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை சந்திப்பு, உடையார்பட்டியில் உள்ள ராம், முத்துராம் திரையரங்கில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு கட்அவுட் அமைத்துள்ளனர். இதில் 100 அடி உயரத்தில் நடிகர் அஜித் மற்றும் விஜய் கட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.
இதற்கிடையில் திரையரங்குகளில் துணிவு படத்திற்கு நள்ளிரவு ரசிகர் காட்சிகளுக்கும்; விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கும் இன்று ரசிகர்களுக்கு டிக்கெட் காலை 11 மணியிலிருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:வாரிசு, துணிவு படங்களின் முன்பதிவு தொடங்கியது