ETV Bharat / entertainment

Mathagam web series: அதர்வா, மணிகண்டன் நடிப்பில் மத்தகம் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியீடு!! - tamil cinema news

அதர்வா, மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள மத்தகம் இணைய தொடர் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2023, 6:08 PM IST

சென்னை: இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் தொகுப்பாளர் டிடி நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. Screen Scene Media Entertainment இந்த் தொடரை தயாரித்துள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா, மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே பேசியதாவது, ”இயக்குநருக்கு நன்றி. பிரசாந்த் இயக்கத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. ஒரு முழு இரவில் நடக்கிற கதை. இதுக்காக அதர்வா, மணிகண்டன் குழு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நினைக்கிறேன் நன்றி”.

நடிகர் மணிகண்டன் பேசியதாவது, ”என்னுடைய சிறு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு எனது நன்றி. இந்த சீரியஸ் பொறுத்த வரை எனக்கு மிகவும் எதிர்பார்ப்புக்கு மீறிய கதாபாத்திரம். இந்த சீரியஸின் படப்பிடிப்பு இரவில் தான் அதிகம் நடைபெற்றது. இயக்குநரின் உழைப்பு தான் அந்த நேரத்திலும் எங்களை ஊக்குவித்தது. இந்த சீரியஸில் நிறைய சிறு கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கென தனி மெனக்கெடலைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடைவிடாத பணியைக் கொடுத்துள்ளனர்". என்றார்

நடிகர் அதர்வா பேசியதாவது, “இப்போது ரிலீசாகும் மத்தகம் 2018, 19இல் ஆரம்பிக்கப்பட்டது. கௌதம் மேனன் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதலில் பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்போது வெளி வர காரணம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி.

மத்தகம் கதை மிகவும் நன்றாக வந்துள்ளது. முழுவதும் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் கேமராவில் தெறிகிறேனா என சந்தேகமாக இருந்தது. ஆனால் நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில் மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” என பேசினார்.

இயக்குநர் பிரசாந்த் முருகேசன் பேசியதாவது, ”எந்த ஒரு படைப்பும் ஒரு ஆழமான நம்பிக்கையில் தான் இயங்கும். அது போல என்னை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு ஓடிடி தளத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நீண்ட நாள் ஆசையாகவும் இருந்தது. வெப் சீரிஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான படைப்புதான் இந்த மத்தகம், தயாரிப்பாளர் சுந்தர் சாருக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

இந்த மத்தகம் இந்த பாகத்தோடு மட்டுமில்லாமல் தொடருவதற்கு பல வாய்ப்புண்டு. அதற்கான கதைகளும் உள்ளது. தர்புகா சிவாவிற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உதவியாக இருந்தார், இரவில் ஒளி அமைப்பை உருவாக்கப் பல மெனக்கெடல் செய்தார். கௌதம் மேனன் சாருக்கு நான் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நடிகர் அதர்வாவிற்கு நன்றி, இந்தப் சீரியஸிற்காக என்னை முழு மனதோடு நம்பினார். அது போல நடிகர் மணிகண்டன் ஒரு மிகச்சிறந்த நடிகர், அவர் கண்டிப்பாக மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த படைப்பிற்காக அவர் கொடுத்த உழைப்பு மிகப் பெரியது. அவருடன் தினமும் பல கதைகள் பற்றி விவாதிப்பேன்.

நிகிலா விமல் என்னுடைய முதல் படத்தின் கதாநாயகி, ஒரு மாத குழந்தைக்கு அம்மாவாக இதிலும் அவர் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீரியஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இந்த படைப்பு உருவாகி இருக்காது, என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி.

அனைத்திற்கும் மேல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் குழுவிற்கு மிகவும் நன்றி, இந்தப் படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல அயராது உழைத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் இந்தப்படைப்பு கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி” என கூறினார். மத்தகம் வெப் சீரியஸ் ஆகஸ்ட் 18ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: நான் நினைத்ததை விட 10 மடங்கு நன்றாக வந்துள்ளது... ஜெயிலர் பற்றி ரஜினி கூறிய கமெண்ட்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.