கடந்த 30 ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னுடைய இசையால் ராஜ்ஜியம் செய்து இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான், இசை என்பதைத் தாண்டி, '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம், எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும், 99 சாங்ஸ் படத்திற்கு, இசையமைத்து தயாரிக்கவும் செய்திருந்தார், ஏ.ஆர். ரஹ்மான். இசை, கதை என்பதைத் தாண்டி இயக்குநர் அவதாரத்தையும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது எடுத்துள்ளார்.
'லி மஸ்க்' என்னும் 36 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார். தனது மனைவியின் ஒன் லைனில் இருந்து ரஹ்மான் இந்த ஐடியாவை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், ’லி மஸ்க்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நோரா அரனிசாண்டர், கை பர்னெட் ஆகியோர் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் ’லி மஸ்க்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'ரவுடி பேபியைக் காணோம்' - தனுஷின் யூ-ட்யூப் சேனல் முடக்கமா?