இந்தியாவின் இசைப்புயல் ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற மகள்களும் உள்ளனர்.
இதில் மூத்த மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி எளிய முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாப்பிள்ளை ரியாஸ்தீன் ஷேக் ஆடியோ என்ஜினியர் ஆவார்.
இந்நிலையில், கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமணம் நேற்று எளிமையான முறையில் நடந்தது. இதை அடுத்து மகளின் திருமண போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்து, “எல்லாம் வல்ல இறைவன் தம்பதியினரை ஆசீர்வதிக்கட்டும். மணமக்களுக்கான உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் முன் கூட்டியே நன்றி” என்று தெரிவித்துள்ளார்.